கர்வால் இமயமலை பகுதியில் சைக்கிளிங் செய்வது மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு ஆகும். சைக்கிளிங் செய்யக்கூடிய சாலைகளை சிரிநகரைச் சேர்ந்த சுற்றுலாத் துறையும் மற்றும் கர்வார் பல்கலைக்கழகமும் இணைந்து தீர்மானித்து வைத்திருக்கின்றன.
சைக்கிளிங் செய்யும் சாலைகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த சாலைகளில் சைக்கிளை ஓட்டிச் செல்லும் போதே இருமருங்கிலும் சூழ்ந்திருக்கும் இமயமலைச் சிகரங்களைப் பார்த்து ரசிக்கலாம். மேலும் சாலை நெடுகிலும் பைன் மற்றும் ஓக் மரக்காடுகள் சுற்றுலாப் பயணிகளைப் பார்த்து கையசைக்கும்.



Click it and Unblock the Notifications