திதிஹாத் எனும் இந்த அமைதியான சுற்றுலாத்தலம் பித்தோராகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகரப்பஞ்சாயத்து அந்தஸ்துடன் விளங்கும் இந்த ஊர் பித்தோராகர் நகரிலிருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1725 மீட்டர் உயரத்தில் திக்தர் எனும் மலையுச்சியில் இந்த சிறு நகரம் அழகாக வீற்றுள்ளது. தண்ட் எனும் குமோனி மொழியிலும் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
‘சிறு மலை’ என்பது இந்த சொல்லின் பொருளாகும். சரம்காட் அல்லது பாதிகாட் என்று அழைக்கப்படும் ஆறு இந்நகரத்திற்கு கீழே ஓடுகிறது. ரம்மியமான ஹாத் பள்ளத்தாக்கு பகுதியும் இந்த நகரத்தை ஒட்டி பரந்து கிடக்கிறது.
மேலும், சிராகோட் எனும் சிவன் கோயிலும் இங்கு அமைந்துள்ளது. நன்பௌப்பு எனும் பக்கத்து கிராமத்தில் அமைந்துள்ள மற்றொரு கோயிலுக்கும் பயணிகள் அதிகம் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications