கபிலேஷ்வர் மஹாதேவ் கோயில் தகௌரா மற்றும் தக்காரி கிராமங்களுக்கு அருகே சோர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. சிவன் கோயிலானது ஒரு குகையின் உள்ளே 10 மீ நீளத்துடன் காணப்படுகிறது.
புராணக்கதைகளின்படி இந்த இடத்தில் கபில முனிவர் தவம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. நகரத்திலிருந்து 3 கி.மீ தள்ளியுள்ள இந்த கோயில் பகுதியிலிருந்து இமயமலைத்தொடர்களை நன்றாக பார்த்து ரசிக்கலாம். சிவபெருமானுக்கான மற்றொரு குகைக்கோயிலும் நகரத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications