நாராயண் ஆஷ்ரம் எனும் இந்த பிரசித்தமான சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து 2734 மீட்டர் உயரத்தில் உள்ளது. பித்தோராகர் நகரிலிருந்து 44 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆசிரமம் ஷீ நாராயண் ஸ்வாமி அவர்களால் 1936ம் ஆண்டில் நிர்மாணிக்கபட்டிருக்கிறது.
பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆசிரமத்தின் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. 40 பேர் தங்குவதற்கான தங்குமிட வசதியும் இந்த ஆசிரமத்தில் செய்யப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவின் காரணமாக குளிர்காலத்தில் இந்த ஆசிரமம் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications