Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போக்ரான் » வானிலை

போக்ரான் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமே போக்ரான் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இப்பருவத்தில் குளுமையான இனிமை நிறைந்த சூழலுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜுன் வரை): போக்ரான் பிரதேசத்தில் ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜூன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. வறட்சி நிலவும் இந்த கோடைக்காலத்தில் குறைந்தபட்சம் 34° C முதல் அதிகபட்சமாக 46° C வரை வெப்பநிலை நிலவுகிறது. அதிக வெப்பம் காரணமாக இக்காலத்தை சுற்றுலாப்பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): ஜுலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை போக்ரான் பிரதேசத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. தென்மேற்கு பருவக்காற்றுகள் மூலம் குறைந்த அளவு மழையையே பொக்ரான் பிரதேசம் பெறுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை): போக்ரான் பகுதியில் அக்டோபர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கின்றது. மிதமான பருவநிலை நிலவும் இக்காலத்தில் சராசரி வெப்பநிலை அதிகபட்சம் 14° C முதல் குறைந்தபட்சம் 1° C வரை நிலவுகிறது. இதமான சூழலுடன் பொக்ரான் பகுதி காட்சியளிப்பதால் பயணிகள் இப்பருவத்தில் போக்ரானுக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர்.