Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழவேற்காடு » வானிலை

பழவேற்காடு வானிலை

பழவேற்காட்டிற்கு கோடைக்காலங்களிலும், தொடர்ச்சியான மழையுடைய காலங்களிலும் வருவது நல்லதல்ல. நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் முடியவுள்ள நாட்கள் பழவேற்காட்டின் பறவைகள் சரணாலயம் மற்றும் பறவைகளை ரசிப்பதற்கு ஏற்ற நாட்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத் துறையினரால் நடத்தப்படும் பிளமிங்கோ திருவிழாவை பார்க்க விரும்புபவர்கள் பழவேற்காட்டிற்கு டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வருவது சிறந்தது.

கோடைகாலம்

பொதுவாகவே மிதவெப்ப மண்டல பருவநிலையைப் பெற்றிருக்கும் நகரமாக பார்க்கப்படும் பழவேற்காட்டில், கோடைக்காலம் மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கும். மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடித்திருக்கும். இந்த பருவத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை பகலில் இருக்கும் வெப்பநிலையானது இரவில் பெருமளவு குறைந்து காணப்படும். மிகவும் வெப்பமான மாதமாக கருதப்படும் மே மாதத்தில், பழவேற்காட்டை சுற்றிப் பார்ப்பதோ, பறவைகளோ காண்பது பரிந்துரைக்கப்படுவதில்லை.

மழைக்காலம்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் பழவேற்காடு அதிக மழைபெறும் இடமாகும். ஜுன் மாதம் இங்கு தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீடித்திருக்கும். மேலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த பகுதி அக்டோபர் மாதத்திலும் சாரல்களுடன் கூடிய மழைப்பொழிவைப் பெறும். இங்கு நிலவி வந்த வெப்பத்திலிருந்து விடுதலையளிக்கும் பருவமாக மழைக்காலம் கருதப்படுகிறது.

குளிர்காலம்

பழவேற்காட்டிற்கு வர பச்சைக்கொடி காட்டும் பருவமாக குளிர்காலம் விளங்குகிறது. இங்கு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் குளுமையான பருவநிலை பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து நீடித்திருக்கிறது. எனவே குளிர்காலத்தில் பழவேற்காட்டிற்கு வருவது மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.