Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புனலூர் » வானிலை

புனலூர் வானிலை

புனலூர் நகரின் பனிக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை அந்த நகரை சுற்றிப் பார்க்க சிறந்ததாக இருக்கும். அதோடு பயணிகள் மழைக் காலங்களிலும் புனலூர் நகருக்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் மே வரை) : புனலூர் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 41 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் சுட்டெரிக்கும் வெப்பம் நிலவுவதால் பயணிகள் கோடை காலங்களில் புனலூர் நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : புனலூர் நகரின் மழைக் காலங்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை புனலூர் நகரைசுற்றிப் பார்க்க சிறந்ததாக இருக்கும்.

குளிர்காலம்

(ஜனவரி முதல் பிப்ரவரி வரை) : புனலூர் நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 15 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் புனலூர் நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.