India
Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜமுந்திரி » வானிலை

ராஜமுந்திரி வானிலை

மிதமான வெப்பநிலை மற்றும் குளுமையான சூழல் நிலவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களே ராஜமுந்திரிக்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இந்த குளிர்காலத்தில் வெப்பநிலை 27° C முதல் 30° C வரை மிதமான அளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோடைகாலம்

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நிலவும் கோடைக்காலத்தில் ராஜமுந்திரி பகுதி மிகக்கடுமையான வெப்பத்தை பெறுகிறது. இக்காலத்தில் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 51° C வரையிலும்கூட செல்வதுண்டு. சராசரி வெப்பநிலை 36° C என்ற அளவில் காணப்படுகிறது. பொதுவாக கோடைக்காலத்தின் சராசரி வெப்பநிலை 34° C முதல் 48° C வரை உள்ளது. கோடைக்காலத்தில் ராஜமுந்திரிக்கு விஜயம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் ராஜமுந்திரி பிரதேசம் கடுமையான மழைப்பொழிவைப் பெறுகிறது. ஜூலை மாதத்தில் துவங்கி அக்டோபர் மாதம் வரை இப்பகுதியில் மழைக்காலம் நீடிக்கின்றது. வங்காள விரிகுடாப்பகுதியில் உருவாகும் புயற்காற்று மற்றும் தாழ்வழுத்தங்களின் மூலமாக இந்தப்பகுதி அதிக மழையை பெறுவது குறிப்படத்தக்கது. மழையை விரும்பும் பயணிகள் வெப்பநிலை குறைந்து காணப்படும் இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.

குளிர்காலம்

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ராஜமுந்திரியில் குளிர்காலம் நிலவுகிறது. இனிமையான, விரும்பத்தக்க சூழல் நிலவும் இக்காலத்தில் குறைந்தபட்சம் 27° C முதல் அதிகபட்சம் 30° C வரையிலான வெப்பநிலை காணப்படுகிறது. ராஜமுந்திரிக்கு சுற்றுலா மேற்கொள்ள குளிர்காலம் மிக ஏற்றதாக உள்ளது.