Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்நாந்த்காவ்ன் » வானிலை

ராஜ்நாந்த்காவ்ன் வானிலை

அதிக வறட்சி மற்றும் அதிக ஈரம் போன்ற பருவநிலை இயல்புகளுடன் காணப்படும் ராஜ்நாந்த்காவ்ன் வெப்பமண்டல பருவநிலையை கொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் இங்கு கடுமையான அல்லது மிதமான மழைப்பொழிவு காணப்படும்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் ராஜ்நாந்த்காவ்ன் பகுதி வறட்சியுடன் காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரை இங்கு வெப்பம் கடுமையாக இருப்பதோடு  42°C வரையிலும் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. எனவே இக்காலத்தில் பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

திடீர் மழைப்பொழிவுகளை பெறும் இயல்பை கொண்டுள்ள ராஜ்நாந்த்காவ்ன் பகுதியில் மழைக்காலத்தில் மிதமான மற்றும் கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. ஜூன் மாத இறுதியில் துவங்கி ஜுலை மற்றும் செப்டம்பரில் மழைக்காலம் தீவிரமாக இருக்கும். தென் மேற்கு மழைக்காற்றுகள் இப்பகுதிக்கு கணிசமான மழைபொழிவை அளிக்கின்றன.

குளிர்காலம்

அக்டோபர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரியில் முடியும் குளிர்காலத்தில் இங்கு மிதமான குளிர் நிலவுகிறது. இக்காலத்தில் இங்கு 27°C முதல் 13°C வரை வெப்பநிலை காணப்படும்.  சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்ற இதமான இனிமையான சூழலை குளிர்காலப்பருவம் கொண்டுள்ளது.