Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜோவ்ரி » வானிலை

ராஜோவ்ரி வானிலை

ராஜோவ்ரி நகரத்தை சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலம் நிலவும், ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களில் வருவது சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். எனினும், ஜில்லென்ற பருவநிலையால் மனதை மயக்கும் குளிர் காலங்களிலும் ராஜோவ்ரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

ஏப்ரல் மாதம் துவங்கும் கோடைக்காலம் ராஜோவ்ரியில் ஜுன் மாதம் வரையிலும் நீடித்து வருகிறது. கோடைக்காலத்தின் போது ராஜோவ்ரியின் வெப்பநிலை 20C முதல் 37C வரை இருக்கும்.

மழைக்காலம்

ராஜோவ்ரி யில் ஜுலை மாதம் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீடித்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் ராஜோவ்ரி மாவட்டம் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. இவ்விடத்தின் சில பகுதிகள் தொடர்ச்சியான மழைப்பொழிவை பெறுவதாகவும், வேறு சில பகுதிகள் ஆலங்கட்டி மழைகளைப் பெறுவதாகவும் உள்ளன.

குளிர்காலம்

டிசம்பர் மாதத்தில் குளிர்காலம் துவக்கத்தை அறிவிக்கும் ராஜோவ்ரி மாவட்டம் பிப்ரவரி மாதம் அதன் முடிவையும் அறிவிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிற பகுதிகளை விட ராஜோவ்ரியின் குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருப்பதில்லை. இந்த காலகட்டத்தில் ராஜோவ்ரியின் பருவநிலை 7C முதல் 15C வரை இருக்கிறது. நல்ல பருவநிலையை இந்த பகுதி கொண்டிருந்தாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வெப்பநிலை வெகுவாக குறைந்து விடும்.