Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராமநகரம் » வானிலை

ராமநகரம் வானிலை

ராமநகரத்தை அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களின் இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை) : ராமநகரத்தின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்த காலங்களில் கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைப்பதால் பயணிகள் ராமநகருக்கு அதன் கோடை காலத்தில் சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : ராமநகரின் மழைக் காலங்களில் பலத்த மழை காரணமாக அந்த பகுதியே வெள்ளக் காடாக காட்சியளிக்கும். மேலும், வழுக்கும் நிலையில் உள்ள பாறைகளில் ஏறுவதும் ஆபத்தாக முடியலாம். எனவே ராமநகரை அதன் மழைக் காலங்களில் சுற்றிப் பார்ப்பது உகந்தது அல்ல.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : ராமநகரின் பனிக் கால வெப்ப நிலை குறைந்தபட்சம் 18 டிகிரியும், அதிகபட்சம் 29 டிகிரியுமாக இருக்கும். இந்த காலங்களில் நிலவும் இதமான வெப்ப நிலையின் காரணமாக, பனிக் காலத்தில் ராமநகரை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளின் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும்.