Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராம்கர் » வானிலை

ராம்கர் வானிலை

கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்தில் இங்கே இனிமையான வெப்பநிலை நிலவுவதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ராம்கருக்கு இந்த காலங்களில் வருவதையே விரும்புகின்றனர்.

கோடைகாலம்

(மே முதல் ஜூன் வரை): ராம்கரில் கோடைக்காலம் மே மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 20 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): ராம்கரில் பருவக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் இங்கே மிதமான மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): ராம்கரில் நவம்பர் மாதம் ஆரம்பிக்கும் குளிர் காலம் பிப்ரவரி வரை  நீடிக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 10 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும்.