India
Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணதம்போர் » வானிலை

ரணதம்போர் வானிலை

அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான பருவமே ரணதம்போருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இப்பருவத்தில் குளுமையான இனிமை நிறைந்த சூழல் நிலவுவதால் காட்டு உயிர்களையும் இயற்கை எழிலையும் ரசிக்க ஏற்றதாக உள்ளது. முக்கியமாக, ரண்தம்போர் தேசிய இயற்கைப்பூங்கா அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு திறக்கப்படும் என்பது நினைவில் கொள்ளவேண்டிய தகவலாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூலை வரை): ரணதம்போர் பிரதேசத்தில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜூலை வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இந்த கோடைக்காலத்தில் குறைந்தபட்சம் 23° C முதல் அதிகபட்சமாக 38° C வரை வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): ஜுலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை ரணதம்போர் பிரதேசத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் இரவில் குளுமையாகவும் பகலில் வெப்பமாகவும் இப்பகுதி காட்ட்சியளிக்கிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): ரணதம்போர் பகுதியில் நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. அதிக குளிர் நிலவும் இக்காலத்தில் குறைந்தபட்சம் 23° C முதல் அதிகபட்சமாக 38° C வரை வெப்பநிலை நிலவுகிறது. சஃபாரி எனப்படும் காட்டுச்சுற்றுலாவுக்கும் மற்றும் இதர இயற்கை சார்ந்த ரசிப்புகளுக்கும், சாகச பொழுதுபோக்குகளுக்கும் இது மிகவும் ஏற்ற பருவமாக உள்ளது.