முகப்பு » சேரும் இடங்கள் » ரோயிங் » வானிலை

ரோயிங் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Amatulla, India 20 ℃ Partly cloudy
காற்று: 5 from the NNE ஈரப்பதம்: 80% அழுத்தம்: 1012 mb மேகமூட்டம்: 28%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 23 Apr 20 ℃ 68 ℉ 26 ℃79 ℉
Tuesday 24 Apr 21 ℃ 69 ℉ 31 ℃88 ℉
Wednesday 25 Apr 17 ℃ 62 ℉ 32 ℃89 ℉
Thursday 26 Apr 17 ℃ 62 ℉ 26 ℃79 ℉
Friday 27 Apr 17 ℃ 62 ℉ 25 ℃78 ℉

ரோயிங் நகரம், மிதமான கோடைகளையும், குளிரான குளிர்காலங்களையும் கொண்டு, மட்டான வானிலையுடன் காணப்படும். குளங்களில் தாமரைகள் பூத்து நிறைந்திருக்கும் காலமான குளிர்காலங்களின் போது ரோயிங்கை சுற்றிப்பார்ப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும்; அதனால் இங்கு செல்வதற்கு குளிர்காலமே ஏற்றதாகும்.

கோடைகாலம்

ரோயிங் நகரின் கோடை கால மாதங்கள் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களே ஆகும். இந்த மாதங்கள் அதிக பட்சமாக சுமார் 30 டிகிரி வெப்பநிலையையும், குறைந்த பட்சமாக சுமார் 15 டிகிரி வெப்பநிலையையும் கொண்டு காணப்படுகின்றன. இச்சமயத்தில் வானிலை இதமாக இருக்கும், அதனால் இச்சமயத்தில் தாராளமாக இங்கு செல்லலாம்.

மழைக்காலம்

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிலவும் மழைக்காலத்தின் போது இங்கு கடும் மழைப்பொழிவு இருக்கும். இந்த மழைக்கால மாதங்கள் ரோயிங்கின் வெப்பநிலையைத் தணிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இக்காலத்தின் போது இங்கு பெய்யும் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்; அதனால் இச்சமயத்தில் ரோயிங்குக்கு பயணிப்பது மிகவும் கடினம்.

குளிர்காலம்

ரோயிங் நகரில் குளிர்காலம் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் நிலவும். இந்த மாதங்கள் அதிக பட்ச வெப்பநிலையாக சுமார் இருபத்து நாலு டிகிரியையும், குறைந்த பட்ச வெப்பநிலையாக ஜீரோ டிகிரியையும் கொண்டிருக்கும். குளிர்காலமே ரோயிங் செல்வதற்கு மிகவும் உகந்த காலமாகும். மேலும் இதுவே உச்சநிலையிலான சுற்றுலாக் காலமுமாகும்.