அழகிய பசுமையான புல்வெளிகள் மற்றும் பனி மூடிய சிகரங்களின் நடுவே அமைந்துள்ள இடம் தான் நந்தி குந்த் ஏரியாகும். இந்து கடவுள் சிவபெருமானுக்காக அமைக்கப் பட்டிருக்கும் இந்த ஏரிதான், அவருடைய வாகனமான நந்தி நீர் அருந்தும் இடமாகும்.
இந்த கோவிலின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இக்கோவிலுக்கு அருகிலிருக்கும் துரப்பிடித்த வாள் ஒன்றும் உள்ளது. புராணங்களின் படி, மகாபாரதத்தில் வரும் அரச குடும்ப வீரர்களான பாண்டவர்களில் ஒருவருடைய வாள் இது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஏரியில் சௌகாம்பா சிகரத்தின் கண்கவரும் காட்சியினையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும். கோடைகாலத்திலும் கூட, இந்த ஏரியின் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும், மத்யமகேஸ்வரர் கங்கை என்னும் நதியும் இந்த ஏரியிலிருந்து தான் உற்பத்தியாகிறது.



Click it and Unblock the Notifications