Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ருத்ரபிரயாக் » ஈர்க்கும் இடங்கள் » தேவ்ரியா தால்

தேவ்ரியா தால், ருத்ரபிரயாக்

24

தேவ்ரியா தால் எனும் ஏரியின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த ரம்மியமான சுற்றுலாத்தலம் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 49 கி.மீ தூரத்தில் உள்ளது. பசுமையான வனப்பகுதியால் இந்த இடம் சூழப்பட்டிருக்கிறது.

இந்த ஏரியில் சௌகம்பா மலைச்சிகரங்கள் மற்றும் கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் நீலகண்ட மலைச்சிகரங்கள் ஆகியவற்றில் பிம்பங்கள் துல்லியமாக விழுந்து பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து 2438 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி சொப்டா-உக்கிநாத் சாலையிலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மேலும், பறவை வேடிக்கை, படகுச்சவாரி மற்றும் தூண்டில் மீன் பிடிப்பு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

இரவு கூடாரத்தங்கல் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் இந்த தேவ்ரியா தால் ஸ்தலத்தில் ஈடுபடுகின்றனர். இப்பகுதிக்கு மலையேற்றம் செய்பவர்கள் அருகிலுள்ள துங்க்நாத் மற்றும் சந்திரஷீலா சேர்த்தே பயணம் மேற்கொள்கின்றனர்.

புராணக்கதைகளின்படி தேவர்கள் இந்த ஏரியில் நீராடியதாக சொல்லப்படுவதால் இந்திர சரோவர் என்ற பெயரிலும் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. யக்ஷன் எனும் பாதாள ராட்சஷன் அஞ்ஞாத வாசத்திலிருந்த பாண்டவர்களை நோக்கி கடினமான கேள்விகளை தொடுத்த சம்பவம் இந்த இடத்தில்தான் நிகழ்ந்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue