காளிமடம் எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சித்தர் பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காளி தேவிக்கான ஒரு கோயிலும் இந்த மட வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.
நவராத்திரி திருநாளின்போது இக்கோயிலின் தெய்வத்தை வழிபட நாடெங்கிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே உள்ள குப்த்காஷி மற்றும் உக்கிநாத் போன்ற இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களுக்கும் யாத்ரீகர்கள் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications