Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரும்தேக் » வானிலை

ரும்தேக் வானிலை

ரும்தேக்கில் வருடம் முழுவதும் வானிலை மிதமானதாகவும் இனிமையாகவும் இருக்கும். குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் அக்டோபர் மாதம் இங்கு வருவதே சிறந்த தருணமாகும்.

கோடைகாலம்

ரும்தேக்கில் பொதுவாக கோடைக்காலம் இனிமையாக இருக்கும். இந்த பருவத்தில் தட்ப வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ் முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கோடைக்காலம் மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் வரை நீடிக்கும்.

மழைக்காலம்

தென் மேற்கு பருவ மழையால் ரும்தேக்கில் மழைக்காலத்தின் போது மிக அதிகமாக மழை பெய்யும். இந்த நேரத்தில் வானிலை மிதமானதாக இருக்கும். மழைக்காலம் ஜூலை மாதம் ஆரம்பித்து செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தக் காலத்தில் இங்கு வருவது நல்லதல்ல.

குளிர்காலம்

ரும்தேக்கில் குளிர் காலம் அக்டோபர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி வரை நீடிக்கும். இந்த பருவத்தில் தட்ப வெப்ப நிலை 16 டிகிரி செல்சியஸ் முதல் -5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குளிர் காலம் ஆரம்பிக்கும் தருவாயில் இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நேரம் இங்கு வருவதென்றால் குளிருக்கு ஏற்ற ஆடையை எடுத்து வருவது நல்லது. முக்கியமாக இது இரவு நேரத்திற்கு குளிரை தாங்க பயன்படும்.