Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சைஹா » வானிலை

சைஹா வானிலை

மழைக்காலம் முடிந்தவுடன், அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர்  மாதங்களில் இங்கு சுற்றுலா செல்வதே சிறந்த காலமாக இருக்கும். குளிர் காலம் மிகவும் கடுமையாக இல்லாததால் இக்காலத்திலும் இங்கு வரலாம். கோடைக்காலமும் கூட சுற்றுலாவிற்கு இதமாக இருக்கும்.

கோடைகாலம்

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சைஹா கோடைக்காலத்தை சந்திக்கும். கோடைக்காலம் இங்கே இடைவெப்பக்காலநிலையுடன் விளங்கும். இங்கு தட்ப வெப்பநிலை சராசரியாக 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். மே மாதத்தில் தான் இங்கே வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த அழகிய மலை வட்டாரத்தை சுற்றிப் பார்க்க இதுவே சிறந்த காலமாகும்.

மழைக்காலம்

மழைக்காலத்தின் போது சைஹாவில் கனமழை பெய்யக்கூடும். ஜூன் மாதம் இங்கே தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்நேரத்தில் மாநிலத்தில் பல பகுதியில் கன மழை பெய்வதால் இந்த இடங்களை சுற்றிப்பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதனால் சுற்றுலா வருவதற்கு இது உகந்த காலம் கிடையாது.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் இங்கு தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி கடைசி வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை சராசரியாக 11 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். இக்காலத்தில் இங்கு பயணிப்பவர்கள் குளிரை தாங்கும் ஆடைகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.