Search
  • Follow NativePlanet
Share

சைஹா - மிசோரத்தின் தெற்கு முனை!

12

மிசோரத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றான சைஹா மிசோரத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் மாவட்ட தலைமையகத்தையும் சைஹா என்று தான் அழைப்பார்கள்.

மாரா தன்னாட்சி உரிமையுடைய மாவட்ட மன்றத்திற்கும் இதுவே மாவட்ட தலைமையமாக செயல்படுகிறது. மிசோரத்தில் உள்ள மூன்று மாவட்ட மன்றங்களில் மாரா தன்னாட்சி உரிமையுடைய மாவட்ட மன்றமும் ஒன்றாகும்.

சைஹா மாவட்டத்திற்கு வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில் லுங்க்லெய் மாவட்டம் அமைந்துள்ளது. அதற்கு மேற்கே லவ்ங்க்டை மாவட்டமும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் மியன்மாரின் சில பகுதிகளும் உள்ளன.

மிசோரத்தில் ஐசவ்ல் மற்றும் லுங்க்லெய்க்கு அடுத்து பெரிய நகரமாக விளங்குளிறது சைஹா. உள்ளூர் பாஷையான மாராவில் உள்ள வார்த்தையான 'சியஹா'வில் இருந்து தான் சைஹா அதன் பெயரை பெற்றது.

இதனை இரண்டு பகுதியாக பிரிக்கலாம் - 'சை' என்றால் யானை என்று பொருளாகும், 'ஹா' என்றால் பல் என்று பொருளாகும். சைஹா என்றால் யானையின் பல் என்று அர்த்தமாகும்.

இந்த இடத்தில் யானையின் பற்கள் பல இருந்ததால் இதனை சைஹா என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். இங்கே மாரா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் மற்றும் மியன்மாரை சேர்ந்த மக்களே அதிகமாக வசிக்கின்றனர்.

இங்குள்ள பாலா டிபோ ஏரி, சைகோ மற்றும் மவ்மா மலை போன்றவைகள் சைஹா சுற்றுலாவை முழுமை அடையச் செய்யும்.

சைஹாவை அடைவது எப்படி?

மிசோரத்தின் தலைநகரான ஐசவ்லிலிருந்து 305 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சைஹா. தேசிய நெடுஞ்சாலை 54 இந்த மாவட்ட தலைமையகத்திற்கு உயிர் நாடியாக விளங்குகிறது. ஐசவ்லில் இருந்து சைஹாவிற்கு பல மாநில பேருந்துகள் இயங்குவதால் இங்கே சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

சைஹாவின் வானிலை

சைஹா  இடைவெப்பக்காலநிலையை கொண்டுள்ளது. அதனால் இங்கே வருடம் முழுவதும் இனிமையான வானிலை நிலவும். கோடைக்காலம் இதமாகவும், பருவக்காலம் ஈரப்பதத்துடன் கன மழையுடன், குளிர் காலம் ரம்மியமாகவும் குறைவான குளிருடன் இருக்கும்.

சைஹா சிறப்பு

சைஹா வானிலை

சிறந்த காலநிலை சைஹா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சைஹா

  • சாலை வழியாக
    ஐசவ்லிலிருந்து சைஹாவிற்கு பயணிக்க சுருக்கமான வழி சில்சார் மற்றும் லுங்க்லெய்-தென்சவ்ல் சாலைகளாகும். தேசிய நெடுஞ்சாலை 54B வழியாக ஐசவ்லை ஐந்தரை மணி நேரத்தில் பயணிக்கலாம். இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே சீரான பேருந்து வசதிகள் உள்ளது. மேலும் பல தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சைஹாவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் தெற்கு அஸ்ஸாமில் உள்ள சில்சாரில் உள்ளது. சைஹாவில் இருந்து 479 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சில்சார். சில்சார் இரயில் நிலையத்திலிருந்து லும்டிங் என்ற இடத்திற்கு குறுகிய இரயில் பாதை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் குவஹடிக்கு இரயில் மூலம் செல்லலாம். சைஹாவிற்கு இரயில் மூலமாக செல்வது அவ்வளவு வசதியாக இருக்காது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சைஹாவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் ஐசவ்லில் 305 கி.மீ. தொலைவில் உள்ளது. லெங்புய் விமான நிலையம் என்று அழைக்கப்படும் இந்த விமான நிலையம் இந்த மாநிலத்தில் உள்ள ஒரே விமான நிலையமாகும். இங்கிருந்து கொல்கத்தா மற்றும் குவஹடிக்கு தினசரி விமான சேவை உள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய விமான நிலையமாக இது திகழ்கிறது. விமான நிலையத்திலிருந்து சைஹாவிற்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue

Near by City