Search
  • Follow NativePlanet
Share

லுங்க்லெய் - இயற்கை விரும்பிகளின் சுவர்க்கம்!

11

மிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது.

லுங்க்லெய் நகரத்தில் வளமையான பல தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் காணலாம். இயற்கை விரும்பிகளுக்கு சொர்கமாக விளங்குகிறது இந்நகரம். லுங்க்லெய்யிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மோல்செங் என்ற கிராமத்தில் புத்தரின் செதுக்கிய ஓவியம் ஒன்றை காணலாம்.

இதில் அதிசயப்படுகிற விஷயம் என்னவென்றால் இந்த மாநிலத்திலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் பழங்காலத்தை சேர்ந்த இந்த புத்த ஓவியம் உள்ளது. இது ஒன்று மட்டும் இங்கே எப்படி வந்தது என்ற மர்மம் நீடிப்பதால் லுங்க்லெய் சுற்றுலாவை சுவாரசியமாக மாற்றியுள்ளது இது.

லுங்க்லெய் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

லுங்க்லெய்யை சுற்றி பல கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், காம்சவி பூங்கா, சைகுடி ஹால் மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் ஆகிவைகள் அவற்றில் சில. மேலும் நதியோரமாக உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்காகவும் லுங்க்லெய் சுற்றுலா புகழ் பெற்று விளங்குகிறது.

லுங்க்லெய்யை அடைவது எப்படி?

மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 175 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது லுங்க்லெய்யின் மாவட்ட தலைமையகம். தலைநகரோடு மட்டுமல்லாமல் மிசோரத்தின் உள்ள மற்ற பகுதிகளோடும் லுங்க்லெய் இணைக்கப்பட்டுள்ளது.

லுங்க்லெய்யின் வானிலை

லுங்க்லெய் மாவட்டத்தில் வருடம் முழுவதும் இனிமையான வானிலையே நிலவும். அனைத்து காலங்களிலும் இதன் வானிலை எப்போதாவது தான் அதிகரிக்கும், அதுவும் தாங்கிக்கொள்ளும் அளவில் தான் இருக்கும். இதனால் வருடத்தில் அனைத்து காலங்களிலும் இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

லுங்க்லெய் சிறப்பு

லுங்க்லெய் வானிலை

சிறந்த காலநிலை லுங்க்லெய்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது லுங்க்லெய்

  • சாலை வழியாக
    மிசோரத்தின் பல பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை 54 கடந்து செல்கிறது. அதனால் லுங்க்லெய் மாநிலத்தின் இதர பகுதிகளுடன் சாலை வழி இணைப்பில் உள்ளது. சாலை வழி போக்குவரத்து தான் இங்கே பிரதான போக்குவரத்தாகும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லுங்க்லெய்க்கு பேருந்துகள் இயங்குகின்றன. இங்கே வருவதற்கு டாக்சிகளையும் வாடகைக்கு எடுக்கலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மிசோரம் மாநிலத்தில் இரயில் நிலையங்கள் கிடையாது. சில்சார் இரயில் நிலையம் தான் இதற்கு அருகில் உள்ளது. சில்சார் இரயில் நிலையத்திலிருந்து லும்டிங் என்ற இடத்திற்கு குறுகிய இரயில் பாதை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் குவஹடிக்கு இரயில் மூலம் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    லுங்க்லெய்யிலிருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள லுங்க்லெய் விமான நிலையம் தான் இதற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். விமான நிலையத்திலிருந்து மாவட்ட தலைமையகத்தை 3 மணி நேரத்தில் வந்தடையலாம். லுங்க்லெய் விமான நிலையத்தில் இருந்து குவஹடி, இம்பால், அகர்தலா மற்றும் கொல்கத்தாவிற்கு நேரடி விமான சேவை உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri

Near by City