Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லுங்க்லெய் » வானிலை

லுங்க்லெய் வானிலை

லுங்க்லெய் மாவட்டத்தில் குளிர் காலம் மிகவும் இதமாக இருப்பதால் இந்நேரத்தில் இங்கு சுற்றுலா செல்வதே உகந்த நேரமாக இருக்கும். தீரச்செயல் புரிய விரும்புபவர்கள் லுங்க்லெய்யில் பார்க்கப்படாத பல இடங்களை கண்டு களிக்கலாம். இருப்பினும் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதென்றால் குளிருக்கு இதமான ஆடைகளை எடுத்து வர வேண்டும்.

கோடைகாலம்

லுங்க்லெய்யில் கோடைக்காலத்தின் போது வெப்பநிலை இதமாகவே இருக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை சராசரியாக 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். மார்ச் மாதம் தொடங்கும் வெப்பநிலை மே மாத இறுதி வரை நீடிக்கும். இக்காலத்தில் லுங்க்லெய்க்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் தோதாக இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் மாதம் இங்கு தொடங்கும் மழைக்காலம் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் வரை நீடிக்கும். பருவக்காலத்தின் போது தட்ப வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இந்நேரத்தில் கனமழை பெய்வதால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு செல்ல முடியாமல் போகலாம்.

குளிர்காலம்

அக்டோபர் மாத இறுதியில் இங்கு தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். நீண்ட காலம் நிலவும் குளிர் காலம் மிகவும் இதமான வாநிளையுடன் விளங்கும். தட்ப வெப்பநிலை ரொம்பவும் கீழே இறங்குவதில்லை. இந்நேரத்தில் இங்கே தட்ப வெப்பநிலை சராசரியாக 21 டிகிரி முதல் 11 டிகிரி வரை நிலவும். இந்நேரம் இங்கு பயணம் செல்பவர்கள் குளிருக்கு இதமான ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.