Search
  • Follow NativePlanet
Share

தெஞ்ஜாவ்ல் - நவீனம் தீண்டாத அழகிய நகரம்!

6

மிஜோராம் மாநிலத்தில் உள்ள தெஞ்ஜாவ்ல் ஒவ்வொரு சுற்றுலா விரும்பியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகிய கிராமமாகும். செர்சிப் மாவட்டத்தில் நிர்வாகத்தின் கீழ வரும் இவ்வூர் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்தது. மிஜோராம் தலைநகர் அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.

1961வரை மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியை 1961 சமப்படுத்தி ஊரக உருவாக்கினார்கள். 1963ல் பெங்குவாயோ சைலோ இவ்வுரை உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. அப்போதிருந்து கைத்தறித் துறையில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

வழமைக்கு மாறான, வித்தியாசமான சுற்றுலாவை விரும்புகிறவர்கள் தெஞ்ஜாவ்ல் செல்லலாம். பூக்கள் மற்றும் விலங்குகளுடன் இருக்கும் இவ்வூர் சிறியதாக இருந்தாலும் சில மதிமயக்கும் சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது.

வன்டாவ்ங்க் நீர்வீழ்ச்சி என்ற மிஜோராமின் உயரமான நீர்வீழ்ச்சி, தெஞ்ஜாவ்ல் தேசிய மான்கள் பூங்கா, பாம்பிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையேயான காதலுக்கு புகழ்பெற்ற சாவ்ங்ச்சி குகை, துவாலுங்கி த்லான் என்ற இடத்தில் தன் கணவனுக்கு அருகில் தன்னைத்தானே புதைத்துக் கொண்ட பெண்ணின் கல்லறை இருப்பதாக நம்புகிறார்கள்.

தெஞ்ஜாவ்ல் அடைய வழி

அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இருக்கும் இவ்வூருக்கு பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதியும் உண்டு. அய்ஜாவ்ல் விமானநிலையத்தில் இருந்ந்து கார் மூலமும் பயணிக்கலாம்.  

தெஞ்ஜாவ்ல் வானிலை

வருடம்முழுதும் இங்கு மிதமான வானிலையே நிலவுகிறது. வெயில் காலங்களில் மிதமான வெப்பமும், மழைக்காலத்தில் அடர் மழையும், குளிர்காலத்தில் இதமான குளிரும் நிலவுவதால் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

தெஞ்ஜாவ்ல் சிறப்பு

தெஞ்ஜாவ்ல் வானிலை

சிறந்த காலநிலை தெஞ்ஜாவ்ல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தெஞ்ஜாவ்ல்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 54 மிஜோராமிற்கு குறுக்கே ஓடுவதால் அய்ஞ்ஜாவ்லில் இருந்து 43கிமீ பயணத்தில் தெஞ்ஜாவ்ல் அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தெஞ்ஜாவ்லில் இருந்து 266கிமீ தொலைவில் உள்ள ரயில்நிலையமே அருகாமை ரயில் நிலையமாகும். அகர்டாலாவிற்கு நேரடியாகவும், கெளஹாத்திக்கு நிறுத்த ரயிலும் இங்கிருந்து உண்டு.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அருகாமையில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருந்து ஒருமணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம். இந்த விமான நிலையத்தில் இருந்து கோல்கட்டா, அகர்டாலா, கெளஹாத்தி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri

Near by City