Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சானாசார் » வானிலை

சானாசார் வானிலை

சானாசாரில் மலையேற்றம், பாராக்ளைடிங், பாறையேற்றம் போன்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபட தகுந்த பருவமாக மார்ச் முதல் மே மாதம் வரை தொடரும் கோடைகாலமே கருதப்படுகிறது. அதனால் இந்தப் பருவத்தில் சானாசாருக்கு செல்வதே சிறந்த அனுபவத்தைத் தரும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): மார்ச் மாதத்தில் ஆரம்பித்து மே மாதம் வரை தொடரும் கோடைகாலம் மிதமான வெப்பத்துடன் இருக்கிறது. அதிகபட்சமாக 40டிகிரியில் இருந்து குறைந்தபட்சமாக 5டிகிரி வரை இங்கு தட்பவெட்பம் பதிவு செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் இங்கு பயணப்படும் பயணிகள் லேசான கம்பளித் துணிகளை எடுத்துச் செல்தல் நலம்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீள்கிறது. மிதமான அளவில் இங்கு மழை பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பருவத்தில் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் மழைக்கால உடைகளை எடுத்துச் செல்தல் அவசியம்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரை): பொதுவாகவே சானாசாரில் குளிர்காலம் மிக நீண்ட காலம்வரை நீடிக்கிறது. அக்டோபரிலேயே ஆரம்பிக்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை தொடர்கிறது. அதிகபட்சமாக 24டிகிரி வரையும் குறைந்தபட்சமாக -14டிகிரி வரையும் இங்கு குளிர் பதிவு செய்யப்படுகிறது. இந்த பருவத்தில் சானாசாருக்கு பயணப்படுவது உகந்ததல்ல.