கடல் மட்டத்தில் இருந்து 2800மீ உயரத்தில் அமைந்திருக்கும் ஷாங்க் பல் கோவில் சான்சாரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகும். ஷாங்க் பல் மலை உச்சியில் அமைந்திருக்கும் இக்கோவிலை அடைய பயணிகள் அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாத மலைப்பாதையில் 5மணி நேரம் நடக்கவேண்டும்.
...ர்ணி குந்த் எனப்படும் சிறிய குளம் ஷாங்க் பல் கோவிலில் இருந்து 2கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஷாங்க் பல் மலை உச்சியில் இருக்கும் இந்தக் குளத்தை 7மணி நேர கடினமான மலைப்பாதையில் நடந்தால் மட்டுமே அடைய முடியும்.
ஷாந்தா மலை உச்சியில் அமைந்திருக்கும் ஷாந்தா கலா பாதை அவ்வழியே பயணிப்போருக்கு பஞ்சரி கிராமத்தின் அழகிய முழு தோற்றத்தையும் காண்பிக்கிறது. லந்தர் பகுதிவரை செல்லும் இந்த பாதையை அடைய 5மணி நேரம் மலைப்பாதையில் நடக்க வேண்டும்.
லடூ லடி என்றால் சிறுவன் சிறுமி என உள்ளூர் மொழியில் அர்த்தம். லடூ லடி என்பது மாதா டாப் என்னுமிடத்தில் இருந்து தொடங்கும் இயற்கை சூழல் நிறைந்த மலையேற்றப் பாதை என்பதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான ஒன்றாக விளங்குகிறது.
மலைப்பிரதேசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலையேற்றம் மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. மலையேற்றம் செய்யும் போது கண்டிப்பாக ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையால் வழங்கப்படும் மலையேற்ற கையேட்டை எடுத்துச் செல்வது அவசியம்.
சானாசார் செல்லும் பயணிகள்...