மலையேற்றம், சானாசார்

மலைப்பிரதேசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலையேற்றம் மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. மலையேற்றம் செய்யும் போது கண்டிப்பாக ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையால் வழங்கப்படும் மலையேற்ற கையேட்டை எடுத்துச் செல்வது அவசியம்.

சானாசார் செல்லும் பயணிகள் முன்பே திட்டமிட்ட பாதைகளில் மலையேற்றத்தை மேற்கொள்ளலாம். இங்கு அமைந்திருக்கும் மலையேற்றப் பாதைகளின் தூரம் குறைந்தபட்சம் 3மணி நேரத்தில் இருந்து 7மணி நேரத்தொலைவு வரை இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.

மலையேறும் போது களைப்படையும் பயணிகள் மலையேற்றப் பாதைகளிள் இருக்கும் உதவியாளர்கள் வாடகைக்கு விடும் மட்டக் குதிரைகளை பயணத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மலையேற்றத்துக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்களை சுற்றுலாத் துறையே தன் கடைகளின் மூலம் வாடகைக்கு விடுகிறது. ஒரு சிறிய தொகையை முன்காப்புத் தொகையாக செலுத்தி இக்கருவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணிகள் முன்காப்பாக தங்கள் கடவுச்சீட்டை ஒப்படைத்தால் மட்டுமே கருவிகள் வழங்கப்படும். 

Please Wait while comments are loading...