Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சரிஸ்கா » வானிலை

சரிஸ்கா வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமே சரிஸ்கா பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலையானது குளுமையுடன் மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் கன்காவ்ர் எனும் உள்ளூர் திருவிழாவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதால் இப்பருவத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் மே வரை): சரிஸ்கா பிரதேசம் மிகக்கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தை பெற்றுள்ளது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 47° C வரை வெப்பநிலை நிலவுவதால் பயணிகள் ‘ஹீட்ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பத்தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். எனவே கோடைக்காலத்தில் சரிஸ்காவுக்கு விஜயம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): சரிஸ்கா பிரதேசம் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மிதமான மழைப்பொழிவை பெறுகிறது. இது இப்பிரதேசத்தில் கோடையின் உஷணத்தை ஓரளவு தணிக்கிறது. இருப்பினும் ஈரப்பதம் அதிகமான சூழல் நிலவுவதால் ஊர்சுற்றிப்பார்ப்பது மிகுந்த அசௌகரியத்தை தரக்கூடியதாகவே இருக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): சரிஸ்காவில் குளிர்காலம் குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4° C வரையில் காணப்படுகிறது. குளுமையான சூழல் காரணமாக சரிஸ்காவுக்கு இக்காலத்தில் பயணம் மேற்கொள்வது இனிமையான அனுபவமாக உள்ளது.