Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சியோனி » வானிலை

சியோனி வானிலை

பருவமழைகாலத்தில் சியோனிக்கு சுற்றுலா செல்வது நல்லதல்ல. ஏனெனில் இங்கு பருவ மழை காலத்தில் கன மழை பொழிகிறது. இங்கு கோடை காலம் மிகுந்த வெப்பமுடன் வறண்டு காணப்படும். மேலும் குளிர்காலத்தில் வறண்ட மற்றும் குளிர்ந்த வானிலை நிலவும்.  பொதுவாக, சியோனி ஒரு துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டிருக்கிறது. எனவே சியோனி மாவட்டத்திற்கு விஜயம் செய்ய குளிர் காலமே மிகவும் சிறந்தது. 

கோடைகாலம்

சியோனின் கோடைகாலம் மிகக் கடுமையான்து. சியோனின் கோடைகாலம் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் முடிவடைகிறது. இங்கு கோடையின்  அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 48 டிகிரி செல்சியஸ் மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த நேரத்தில் சியோனிக்கு சுற்றுலா செல்லவதற்கு  வானிலை சாதகமாக இல்லை.

மழைக்காலம்

சியோனி ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கனமான மழையை அனுபவிக்கிறது. இந்த பகுதி பருவமழை காலத்தில் சராசரியாக சுமார் 2150 மிமீ மழையளவைப் பெறுகிறது. பார்வையாளர்களுக்கு கன மழை மத்தியில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே சுற்றுலா பயணிகள் இந்த நேரத்தில் இங்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்படுகிறார்கள்.

குளிர்காலம்

இங்கு குளிர்காலம் அக்டோபர் மாதத்தில் தொடங்கி  ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது. குளிர் காலத்தின் அதிக பட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 36 டிகிரி செல்சியஸ் மற்றும் 9 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர்காலமே சியோனிக்கு சுற்றுலா செல்ல சிறந்த நேரம் ஆகும்.