சாயி பாபாவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் ஒன்று இந்த சாவடி. தன் கடைசி காலங்களில் பாபா பெரும்பாலான நேரத்தை இங்குதான் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த இடத்திலிருந்து அவர் ஊர்வலமாக துவாரகாமாய் மசூதிக்கு அழைத்து செல்லப்படுவது அன்றைய வழக்கம்.ஆகவே இன்றும் வியாழக்கிழமைகளில் அதே போன்று ஒரு ஊர்வலச்சடங்கு இந்த சாவடியிலிருந்து துவாரகாமாய் மசூதி வரை நடத்தப்படுகிறது.
சாவடி இரண்டு பிரிவுகளை கொண்டது. ஒரு பிரிவில் பாபாவின் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் பாபா பயன்படுத்திய மரப்படுக்கையும் வெண்ணிற நாற்காலியும் வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications