Search
  • Follow NativePlanet
Share

ஷிர்டி – சாயி பிறந்த இடம்

17

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹமத் நகர் மாவட்டத்தில் இருக்கும் ஷிர்டி கிராமம் நாசிக் நகரத்திலிருந்து 88 கி.மீ தூரத்தில் இருக்கிறது.  ஒரு புராதனமான பழைய ஊராக இருந்த இந்த ஷிர்டி கிராமம் இன்று சந்தடி மிகுந்த ஒரு பெரும் யாத்ரீக ஸ்தலமாக மாறியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த குருவான சாயி பாபா பிறந்த இடம் இந்த ஷிர்டி ஆகும். ஷிர்டியில் பாபா அரை நூற்றாண்டு காலம் அதாவது ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து இந்த சிறிய கிராமத்தை ஒரு பெரிய யாத்ரீக ஸ்தலமாக மாற்றியுள்ளார். உலகெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க ஷிர்டிக்கு வருகை தருகின்றனர்.

ஷிர்டி – தெய்வீக குரு சாயி வசித்த இடம்

சாயீ பாபாவின் தோற்றம் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால் அவரது பிறப்பு விவரங்கள் புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவே உள்ளது. இருந்தாலும் பதினாறு வயதே ஆன இளம் பருவத்தில் அவர் ஒரு வேப்ப மரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் அமர்ந்தபோது அவர் மக்கள் மனதில் ஒரு மகானாக இடம் பிடித்து விட்டிருந்தார்.

சாயி பாபா தன் வாழ் நாள் முழுவதையும் ஏழை மக்களின் துயர் துடைக்கவும் முன்னேற்றத்துக்கும் அர்ப்பணித்துக் கொண்டார். சிவனின் அவதாரமாகவே கருதப்பட்ட அவர் ‘தெய்வத்தின் குழந்தை’ என்ற சிறப்பை பெற்றார்.

சாயி தன் வாழ் நாளை ஷிர்டியில் வாழ்ந்தவாறே ஒன்றுபட்ட சகோதரத்துவம் மற்றும் மத இணக்கம் போன்ற உன்னத கருத்துகளை பரப்புவதில் செலவழித்தார். அவர் அடிக்கடி சொல்லிய வாசகம் இது: “ஸப்கா மாலிக் ஏக்”. ‘அனைவருக்கும் ஒரே கடவுளே’ என்பதே அந்த உன்னத வாசகத்தின் பொருளாகும்.

அதன் பின்னர், ஷிர்டி கிராமம் எல்லா திசையிலிருந்தும் பக்தர்கள் வந்து குவியும் ஒரு ஸ்தலமாக மாறியது. சாய் பாபா என்னும் தெய்வீக மகானை தரிசித்து மகிழ்வதற்கு மக்கள் அதிக அளவில் வர ஆரம்பித்தனர். சாயி பாபா சிவலோக பிராப்தி அடைந்த பிறகு அவரது சமாதி ஸ்தலத்தை காண்பதற்கு இன்றும் யாத்ரீகர்களும் பக்தர்களும் ஷிர்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சிறு வயதில் பால யோகியாக தியானத்தில் சாயி பாபா அமர்ந்த இடம் குருஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் இன்று ஒரு கோயிலும் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் சாயி பாபா ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்கி உறங்கிய இடம் என்று கூறப்படும் துவாரகாமாய் மசூதி என்ற இடமும் தற்போது ஷிர்டியில் சாயி பாபா சம்பந்தப் பட்ட இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.  கண்டோபா கோயில், சகோரி ஆசிரம்ம், ஷானி மந்திர், சங்தேவ் மஹாராஜ் மந்திர் போன்றவை ஷிர்டியில் பார்க்க வேண்டிய மற்ற இடங்களாகும்.

லெண்டி பாக் என்றழைக்கப்படும் ஒரு சிறு பூங்கா தோட்டம் சாயி பாபாவால் நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட தோட்டமாகும். சாயி பாபா இங்கு தினமும் வருகை தந்து இங்கிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த லென்டி பாக் தோட்டத்தில் நந்ததீபம் என்ற அழைக்கப்படும் ஒரு எண்முக தீபக்கிருகம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பக்தர்கள் விடியற்காலையில் இருந்தே சாயி பகவானின் திரு உருவச்சிலையை தரிசித்து வணங்குவதற்காக வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுகின்றனர். அதுவும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜையும் தரிசனமும் இருப்பதால் அப்போது கூட்டம் இன்னும் அதிகமாக காணப்படுகிறது. காலை பூஜையுடன் 5 மணிக்கு திறக்கப்படும் சாயி பாபா கோயில் இரவு 10 மணிக்கு இரவு பூஜையுடன் மூடப்படுகிறது.

இங்குள்ள  பிரார்த்தனைக் கூடம் சுமார் 600 பக்தர்கள் கூடும் அளவுக்கு இடவசதியுடன் காணப்படுகிறது. கோயிலின் முதல் தளத்தில் சாயி பாபாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பக்தர்கள் பொறுமையாக பார்த்து மகிழ அனுமதி உண்டு. ஷிர்டியின் கடைத்தெருக்களில் பாபாவின் வாழ்க்கை பற்றிய பலவிதமான புத்தகங்களும் இதர நினைவுப் பொருட்களும் பெருமளவில் கிடைக்கின்றன.

ஷிர்டி – ஒரு ஆன்மீக யாத்ரீக ஸ்தலம்

ஒரு சிறு நகரமான ஷிர்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் தீவிரமான பக்தி பிரவாகத்தில் நிரம்பி வழிகிறது. இந்த ஊர் உலகின் முக்கியமான ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாக பரவலாக அறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷிர்டியில் உள்ள ஷானி, கணபதி மற்றும் ஷங்கர் தெய்வங்களுக்கான கோயில்களும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இங்குள்ள புனித கோயிலுக்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் வருகை தரலாம். இருந்தாலும் மழைக்காலத்தில் இங்கு வருவது உகந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அக்காலத்தில் இப்பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை விரும்பத்தக்கதாக உள்ளதே காரணம்.

ஷிர்டியில் மூன்று முக்கிய திருவிழாக்களை அடிப்படையாக வைத்து பக்தர்கள் இங்கு வருவதற்கு திட்டமிட்டுக் கொள்ளலாம். குரு பௌர்ணிமா, துஷேரா மற்றும் ராம நவமி எனும் மூன்று திருவிழாக்களே அவை.

இந்த திருவிழாக்களின் போது எண்ணிலடங்கா பக்தர்களும் யாத்ரீகர்களும் ஷிர்டியில் குவிவதால் அச்சமயம் இந்த இடம் பஜனை கோஷங்களால் உயிர் பெற்று காணப்படுகிறது.

பிரசித்தி பெற்ற ரத யாத்திரையும் அச்சமயம் யாவரும் பங்கேற்குமாறு நடத்தப்படுகிறது. இந்த மூன்று குறிப்பிட்ட திருவிழக்காளின் போது மட்டுமே ஷிர்டியில் உள்ள சமாதி மந்திர் இரவு முழுதும் திறந்து வைக்கப்படும் என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும்.

சாய்பாபாவிற்கான இந்த ஆன்மீக திருத்தலம் சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் எளிதில் சென்றடைவதற்கு வசதியாகவே உள்ளது. மிக நன்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நகரம் நாசிக், புனே மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் நல்ல முறையில் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

ஷிர்டிக்கருகில் ஒரு விமான நிலையம் ஒன்றும் தற்சமயம் கட்டப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தபின் உலகெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சாலை மார்க்கமாக ஷிர்டியை அஹ்மத்நகரிலிருந்து மன்மத் நகரத்தை இணைக்கும் மாநிலை நெடுஞ்சாலை எண்:10 ல் பயணம் செய்தால் கோபர்காவ்ன் எனும் ஊரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் ஷிர்டியை அடையலாம்.

ஷிர்டி சிறப்பு

ஷிர்டி வானிலை

சிறந்த காலநிலை ஷிர்டி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஷிர்டி

  • சாலை வழியாக
    அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் ஷிர்டியிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து வகையை பொறுத்து கட்டணங்கள் நபருக்கு 200 லிருந்து 400 வரை வசூலிக்கப்படுகிறது. ஷிர்டியிலிருந்து மும்பை, புனே, நாசிக் மற்றும் இதர நகரங்களுக்கு பேருந்து வசதிகள் கிடைக்கின்றன. அரசுப்போக்குவரத்து கழகமும், தனியார் நிறுவனங்களும் சொகுசு பேருந்துகளை மும்பையிலிருந்து இயக்குகின்றன. இது தவிர நாசிக், அஹ்மத்நகர், அவுரங்காபாத், புனே மற்றும் கோபர்காவ்ன் நகரங்களிலிருந்தும் ஷிர்டிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மும்பையிலிருந்து நேரடியாக டாக்சியில் செல்வதென்றால் ரூ 6000 கட்டணத்தில் ஷிர்டிக்கு செல்லலாம். மும்பைக்கும் ஷிர்டிக்கும் இடையே சாலை வழி தூரம் 241 கி.மீ ஆகும். நாசிக்கிலிருந்து ஷிர்டி 88 கி.மீ தூரத்தில் உள்ளது. அவுரங்காபாத் ஷிர்டியிலிருந்து 109 கி.மீ தூரத்திலும், புனே ஷிர்டியிலிருந்து 187 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மிக சமீப காலமாக ஷிர்டிக்கு இந்தியாவின் பிற முக்கிய பகுதிகளிலிருந்து ரயில்களும் இயக்கபடுகின்றன. புதிதாக ஷிர்டியில் கட்டப்பட்டுள்ள ரயில் நிலையம் ஆசிரமத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து பல நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் மூலமாக பயணம் செய்வது செலவு குறைந்ததாகவும் உண்மையான ஒரு பாபா பக்தருக்கு பொருத்தமானதாகவும் இருக்கும் என்பது ஒரு உண்மை.ஷிர்டி பாஸ்ட் பாசஞ்சர் மற்றும் ஜன்ஷதாப்தி என்ற இரண்டு ரயில்கள் மும்பை ஷத்ரபதி சிவாஜி டெர்மினஸிலிருந்து ஷிர்டிக்கு இயக்கப்படுகின்றன. இது தவிர 51 இதர ரயில்களும் குறிப்பிட்ட சில நாள்கள் தவிர்த்து இயக்கப்படுகின்றன. பயண நேரம் புறப்படும் இடத்துக்கேற்ப அமையும். சென்னையிலிருந்து புறப்படும் ஷிர்டி எக்ஸ்பிரஸ் இங்கு வந்து சேர்வதற்க்கு ஒரு நாளுக்கு மேல் எடுத்துக்கொள்வது குறிப்பிடத் தக்கது.மேலும் கோபர்காவ்ன், மன்மாத் என்ற இரண்டு பெரிய ரயில் நிலையங்களும் ஷிர்டியிலிருந்து முறையே 13 கி.மீ மற்றும் 52 கி.மீ தூரத்தில் உள்ளன. இந்த இரண்டு ரயில் நிலையங்களுடம் பல மஹாராஷ்டிரா மாநில நகரங்களுடனும் இதர மாநிலை நகரங்களுடனும் பல ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ரயில் நிலையங்களிலிருந்து ஷிர்டி வருவதற்கு டாக்சிகளும், பேருந்து வசதிகளும் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஷிர்டிக்கு மிக அருகிலுள்ள விமான நிலையம் மும்பையிலுள்ள சத்ரப்தி சிவாஜி விமான நிலையம் ஆகும். இது ஷிர்டியிலிருந்து 305 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையம் இந்தியாவிலுள்ள மற்ற முக்கிய மாநகரங்களுடனும், வெளி நாட்டு நகரங்களுடனும் பல விமான சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஷிர்டிக்கு அருகிலுள்ள இதர விமான நிலையங்கள். நாசிக், காந்தி நகர் விமான நிலையம் – 76 கி.மீ (வான் மார்க்கமாக) சிக்கல்தானா விமான நிலையம் – 104 கி.மீ (வான் மார்க்கமாக) லோஹேகாவ்ன் விமான நிலையம் - (வான் மார்க்கமாக) மஹாராஷிரா அரசாங்கம் 2012 இறுதிக்குள் ஷிர்டியில் விமான நிலையம் இயங்க ஆரம்பிக்கும் என்று அறிவித்துள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் தற்சமயம் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun