ஷிர்டியிலுள்ள தீக்ஷித் வாடா மியூசியம் மிக அழகான ஒரு அருங்காட்சியகமாகும். இது சன்ஸ்தான் மையத்தின் நடுவில் அமைந்துள்ளது. இந்த மியுசியத்தில் பாபாவின் அரிதான் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மற்றும் பாபா பயன்படுத்திய ஆடைகள், அவரது நீண்ட அங்கி (கஃப்னி), அவர் பயன்படுத்திய தோல் செருப்புகள் மற்றும் அவர் புகைக்க பயன்படுத்திய பைப் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பாபா பயன்படுத்திய கிராமபோன் தட்டுகள், தண்ணீர் குவளைகள், சமயல் பாத்திரங்கள் மற்றும் குளிக்க பயன்படுத்திய கல் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தீக்ஷித் வாடா மியூசியம் பொது மக்களுக்கு காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications