லட்சுமி பாயி ஷிண்டேயின் நினைவகம் ஷிர்டியில் ஒரு முக்கிய இடமாக கருதப்படுகிறது. சாயி பாபாவின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த லட்சுமி பாய் பாபாவின் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் என்பது குறிப்பிட த்தக்கது.
ஷிர்டிக்கு பாபா வந்தது முதல் அவர் உணவுக்கு பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தார். ஆகவே அவருக்கு லட்சுமி பாய் செய்த தானங்களை பற்றி அவர் எப்போதும் நினைவு கூர்வதுண்டு.
எனவே பாபா சமாதியடைவதற்கு முன்பு அவர் லட்சுமி பாய்க்கு ஒரு ஐந்து ரூபாய் தாளையும் இன்னும் ஒரு நான்கு ரூபாய்களையும் சேர்ந்து மொத்தம் ஒன்பது ரூபாயாக அளித்தார்.
இதன் மூலம் அவர் ஒரு நல்ல சீடரின் ஒன்பது முக்கிய குணாம்சங்களை குறிப்பிட்டதாக நம்பப்படுகிறது. பாபா பல சந்தர்ப்பங்களில் லட்சுமி பாய்க்கு பணம் தந்திருந்தாலும் கடைசியாக அவர் கொடுத்த இந்த ஒன்பது ரூபாய் முக்கியமானதாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications