ஷிர்டியை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இந்த கண்டோபா மந்திர் அமைந்துள்ளது. கண்டோபா இங்குள்ள கிராமத்தின் காவல் தெய்வம் ஆகும். இந்த கோயிலில் கண்டோபா, பனாய் மற்றும் மல்சாய் போன்ற கடவுள்களின் சிலைகள் உள்ளன.
ஒரு முறை ஒரு கல்யாணக்குழுவினருடன் சாயி பாபா இவ்வழியே வந்த போது இந்த கோயிலின் அருகில் உள்ள ஆல மரத்தடியில் அவர் அமர்ந்ததாகவும் அவரை இக்கோயிலின் பூசாரி “வர வேண்டும் சாயி” என்று அவரை முன்பே அறிந்தவர் போன்று வரவேற்றதாகவும் ஒரு ஐதீகம் நிலவுகிறது. இந்த கோயில் அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை பக்தர்களுக்கு திறந்து வைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications