ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ஷனி கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வியப்பான தகவல் என்னவெனில் இந்த கோயில் இருக்கும் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது.
இங்குள்ள மக்கள் அவர்கள் வீடு மற்றும் உடைமைகளை தீமைகளிலிருந்தும், திருட்டிலிருந்தும், கடவுள் ஷானேஸ்வரா காத்திடுவார் என்று ஐதீகமாக நம்புவதே இதன் பின்னணியில் உள்ள காரணமாகும்.
திருட்டில் ஈடுபடும் மனிதருக்கு ஷானேஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்று இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் ஷனி கடவுளின் விக்கிரகம் கருங்கல்லால் வடிக்கப்பட்டு மிகப்பெரிதாய் காட்சியளிக்கிறது. ஆண் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று இந்த தெய்வத்தை தரிசித்து தொழுவதற்கு அனுமதிக்கப் படுகின்றனர்.
ஆண் பக்தர்கள் முதலில் இங்குள்ள பொதுக்குளியல் இடத்தில் குளித்துவிட்டு அதன் பின்னர் மேலாடை இல்லாமல் ஈர வேட்டியுடன் தான் ஷானி கடவுளை வணங்க வேண்டும் என்ற ஐதீக மரபு இங்கு கடைப்பிடிக்கப் படுகிறது.ஷிர்டி வரும் எல்ல யாத்ரீக பக்தர்களும் ஷானி கடவுளையும் மறக்காமல் தரிசித்து செல்கின்றனர். இந்த கோயில் காலை 5 மணியிலிருந்து 10 மணி வரை பக்தர்களுக்கு திறந்துள்ளது.



Click it and Unblock the Notifications