சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவி கங்காதேஸ்வரா கோயில் பெங்களூரை நிறுவியவர் என்று சொல்லப்படும் கெம்பி கௌடா என்பரால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் அக்னி பகவானின் சிலையுடன் சேர்த்து மொத்தம் 34 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த தனித்துவமான குகை ஒரே கல்லில் இயற்கையாக குடைந்து உருவானது. இதன் வடிவமைப்புக்காக இது வாஸ்துக் கலையுடனும், ஜோதிடக் சாஸ்த்திரத்துடனும் இணைத்து பேசப்படுகிறது.
இங்கு நடைபெறும் மகர் சங்கராந்தி திருவிழாவில், கோயிலுக்குள் புகும் சூரிய ஒளி நந்தியின் கொம்புகளுக்கு இடையே சென்று சிவபெருமானின் விக்ரகத்தை பிரகாசிக்க செய்யும் காட்சியின் அழகை காண கண் கோடி வேண்டும். இதை காண்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்குள் நுழைவர்.



Click it and Unblock the Notifications