ஷிவனசமுத்ரம் வரும் பயணிகள் கண்டிப்பாக ஷிவனசமுத்ரம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். இது பரச்சுக்கி மற்றும் ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி என்று இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. 200 அடி உயரத்திலிருந்து விழும் இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் காவிரி ஆற்றில் கலக்கின்றன.
இந்த இரட்டை நீர்வீழ்ச்சி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகவும் உலகின் 100 முக்கிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இங்கு 1902ல் கட்டப்பட்ட நீர்மின்னுற்பத்தி நிலையமும் அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே மத்ய-ரங்கா தீவில் அமைந்துள்ள ரங்கநாத ஸ்வாமி கோயிலையும் பயணிகள் தரிசிக்கலாம். ஹொய்சள ஆட்சியில் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலை அடைய பயணிகள் காவிரியில் உள்ள இரண்டு பாலங்கள் வழியே செல்ல வேண்டியுள்ளது.
ஷிவனசமுத்ரம் நீர்வீழ்ச்சிக்கு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications