Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » ஈர்க்கும் இடங்கள் » நர்வார் கோட்டை

நர்வார் கோட்டை, ஷிவ்புரி

23

காளி சிந்த் ஆற்றின் கிழக்குப்பகுதியில் இந்த நர்வார் கோட்டை அமைந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான வரலாற்றுச்சின்னமாக இப்பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது.

ஷிவ்புரியிலிருந்து 42 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோட்டை அக்கால மன்னராட்சியின் போது எல்லைகள் மற்றும் நாட்டு விரிவாக்கத்துக்காக நடைபெற்ற இடைவிடாத போர்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோட்டை நகரம் 12ம் நூற்றாண்டு வரை நளபுரா என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. நளமஹராஜா எனும் பிரசித்தமான மன்னரால் ஆளப்பட்ட இந்த நகரம் பற்றிய குறிப்புகள் மஹாபாரதத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

நள – தமயந்தி காதல் கதை பல காலமாக வழங்கி வரும் புரணாக்கதைகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் ஒரு மலையின் உச்சியில் இந்த கோட்டை வீற்றுள்ளது.

8 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டைப்பகுதி ஒரு உன்னதமான வரலாற்றுக்காலத்தை நினைவுறுத்தி காலப்பெட்டகமாக காட்சியளிக்கிறது. காலப்போக்கில் இயற்கையால் உருவாக்கப்பட்ட பாதிப்புகளை சுமந்து நின்றாலும் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் உறுதியுடன் இந்த கோட்டை தோற்றமளிக்கிறது.

தட்டையான உட்கூரைகள் மற்றும் குடைவு அலங்கார நுணுக்கங்கள் கொண்ட தூண்கள் போன்றவை ராஜபுதன பாணியை பிரதிபலிக்கும் அம்சங்களாக இந்த கோட்டையில் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu