Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிப்சாகர் » வானிலை

சிப்சாகர் வானிலை

இயற்கையின் அழகை ரசிக்க, வன விலங்குகளைக் காண மழைக்காலத்தில் செல்லலாம். பொதுவாக, குறைவான வெப்பம் உடைய குளிர்காலத்தில் சிப்சாகருக்கு சுற்றுலாச் செல்வது சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் மாதம் வரை சிப்சாகரில் வெயில் காலம். இந்த சமயத்தில் சிப்சாகரில் புழுக்கம் அதிகமாக இருக்கும். கோடைகாலத்தில் கூட மழை பொழிவதால், வெப்பம் குறைந்து இதமான சூழ்நிலை இருக்கும். வெயில்காலத்தில், குறைந்தபட்சமாக 15 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும்.

மழைக்காலம்

சிப்சாகர் பகுதியில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை பருவ மழை பொழியும். நல்ல மழைப் பொழிவால், பகுதி முழுக்க பச்சைப் பசேல் என எழில் கொஞ்சும் சுற்றுச் சூழலுடன் காண்போரின் எண்ணங்களைக் கவரும் வகையில் இருக்கும். மழைப் பொழிவு அதிகமாக இருந்தாலும், புழுக்கமும் சேர்ந்தே இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரைசிப்சாகரில் குளிர்காலம். குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும். ஜனவரி மாதத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். சிப்சாகரைச் சுற்றிப்பார்க்க குளிர்காலம் சிறப்பானதாக இருக்கும்.