சிகார் நகரிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராம்கர் நகரம் 1791-ஆண்டு ராவ் ராஜா தேவி சிங் மகாராஜாவால் கண்டறியப்பட்டது. இந்த நகரம் பல்வேறு நினைவுச் சின்னங்கள், கோயில்கள், ஹவேலிகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்காக மிகவும் பிரபலம்.
இங்கு வரும் பயணிகள் ராம் கோபால் போட்டார் நினைவுச் சின்னம், தாரா சந்த் கன்ஷியாம் தாஸ் போட்டார் ஹவேலி, பெய்ஜ் நாத் ருஹியா ஹவேலி, ராம் கோபால் போட்டார் ஹவேலி, கோபி ராம் பகாரியா ஹவேலி போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம்.
இவைதவிர மோத்திலால் சன்வைகா ஹவேலி, ஷானி தேவ் கோயில், கங்கா கோயில், பாலாஜி கோயில் மற்றும் மான் ஜி கெம்கா ஹவேலி ஆகிவையும் நீங்கள் ராம்கர் சுற்றுலா வரும் போது பார்க்க வேண்டிய இடங்கள்.



Click it and Unblock the Notifications