Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்சார் » வானிலை

சில்சார் வானிலை

சில்சார் ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலையைப் பெற்று இருப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த நகரத்திற்கு ஆண்டின் எந்த நேரத்திலும் சுற்றுலா செல்ல முடியும். எனினும், சுற்றுலா பயணிகள் மழைகாலத்தை தவிர்ப்பது மிக நல்லது. கோடை மற்றும் குளிர் காலங்களில் இந்த நகரத்திற்கு சுற்றுலா வருவது இந்த நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை பார்வையிட மிகவும் சிறந்ததாகும்.

கோடைகாலம்

இங்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் கோடை காலம் ஜூலை வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில் சில்சாரின் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 35 மற்றும் 22 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்தப் பருவத்தில் பகல் பொழுது ஈரப்பதம் மிகுந்து காணப்படும்.

மழைக்காலம்

பருவமழைக் காலங்களில் சில்சார் கனிசமான அளவு மழையைப் பெறுகிறது. இங்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பருவமழை பொழிகிறது. கோடைக்கு பின் வரும் மழைக் காலம் கோடை வெப்பத்திற்கு ஆறுதல் அளிக்கிறது. கடும் மழைப் பொழிவு காரணமாக இங்கு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நெரிசல் மிகுந்து காணப்படும்.

குளிர்காலம்

சில்சாரின் மிக இனிமையான பருவம் குளிர்காலம் ஆகும். இந்தப் பருவதில் மழை குறைந்தவுடன் குளிர் தொடங்குகிறது. இங்கு நவம்பர் மாதத்தின் இறுதியில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் சில்சாரின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 25 மற்றும் 12 டிகிரி செல்ஸியஸ் ஆகும். குளிர்காலங்களில் சில்சாருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் லேசான கம்பளி ஆடைகளை எடுத்துக் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.