சோலனில் இருந்து 67 கி.மீ தொலையில் இருக்கும் சண்டிகர் விமான நிலையமே, இதற்கு நெருக்கமான விமான நிலையம். இந்த உள்நாட்டு விமான நிலையம் புது தில்லி, மும்பை, ஸ்ரீநகர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற இடங்களோடு நன்கு இணைக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தின் வெளியே இருக்கும் வாடகை சொகுசு ஊர்திகள் மூலமாக சோலன் நகரை சுலபமாக அடையலாம்.