Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனமார்க் » வானிலை

சோனமார்க் வானிலை

சோனமார்க் பகுதி ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும். குறிப்பாக குளிர் காலத்தில் இந்த பகுதியின் வெப்பநிலை 0 டிகிரிக்கும் கீழே இருக்கும். அதனால் மே முதல் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு வந்தால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

கோடைகாலம்

கோடை காலமான மே முதல் அக்டோபர் மாதங்களில் சோனமார்க் பகுதி குளிராகவும் அதே நேரத்தில் இதமாகவும் இருக்கும். இந்த நேரத்தில் இந்த பகுதியின் வெப்ப நிலை 14 டிகிரி செல்சியசாக பதிவாகும். கோடை காலத்தில் இந்த பகுதிக்கு சுற்றுலா செல்லவதோ அல்லது ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதோ மிகச் சிறந்த அனுபவத்தை தரும்.

மழைக்காலம்

மழைக் காலத்தில், சோனமார்க் பகுதியில் எப்போது மழை வரும் என்று தெரியாது. மழைக் காலத்தில் இங்கு பனிச்சறுக்கு செய்வது  மிகவும் ஆபத்தாக இருக்கும். அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதியில் மழைக்காலத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

குளிர்காலம்

நவம்பர் முதல் ஏப்ரம் மாதம் வரை சோனமார்க் பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. பனிக்கட்டிப் பொழிவு இந்த காலத்தில் மிக அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் உறைந்து போன ஏரிகளையும், ஆறுகளையும் மற்றும் பனி படர்ந்திருக்கும் மலைச் சிகரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.