முக்கா நீர்வீழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்திலும், ஷிவ்துவார் கோயிலிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச்-கோராவால்-முக்கா தரி சாலையில் அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியானது தேவி மந்திர் அல்லது கரியா தால் எனும் ஏரிக்கு அருகில் பேலன் ஆற்றில் அமைந்திருக்கிறது. இது சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். மழைக்காலத்தில் பிரமிக்க வைக்கும் எழிலோடு இது காட்சியளிக்கிறது.