ரிஹாந்த் அணை உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ரேணுகு-சக்திநகர் சாலையில் பிப்பாரி எனும் இடத்தில் அமைந்துள்ளது.
ரேணுகுட் பகுதியிலிருந்து 5 மைல் தூரத்திலும், சோன் ஆறு ரிஹாந்த் ஆற்றுடன் இணையும் இடத்திலிருந்து 46 கி.மி தூரத்திலும் இந்த அணை உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் சுர்குஜா மாவட்டத்தின் தெற்கு பீடபூமிப்பகுதியை ஒட்டி இந்த அணை அமைந்திருக்கிறது.
சோன் ஆற்றின் துணை ஆறான ரிஹாந்த் ஆற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் இந்த அணை கோவிந்த் பல்லப் பந்த் சாகர் ஏரியை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏரி 450 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
1954ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணைக்கட்டுமானம் 1962ம் ஆண்டில் முடிக்கப்பட்டிருக்கிறது. 91.4 மீ உயரம் மற்றும் 934.21 மீ நீளம் உடையதாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.
300 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட ஒரு நீர் மின் நிலையத்தையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில மின்சாரத்துறை இதனை பராமரித்து வருகிறது.
இந்த அணையில் 61 தனித்தனி இணைப்பு மதகுகள் உள்ளன. அணையின் நீரானது ரிஹாந்த் ஆற்றின் வழியாக மாநிலத்தின் விவசாயத்தேவைகளுக்கு வருடம் முழுவதும் திறந்துவிடப்படுகி