Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிரவணபெலகொலா » வானிலை

சிரவணபெலகொலா வானிலை

அக்டோபரிலிருந்து ஏப்ரல் மாதத்துக்கு இடைப்பட்ட காலம் சிரவணபெலகொலாவுக்கு விஜயம் செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் ஜைன யாத்ரீகர்கள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் சிரவணபெலகொலா கடுமையான வெப்பத்தை கொண்டுள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக பகலில் 240C முதல்  370C  வரை காணப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக இங்கு கோடைக்காலத்தில் விஜயம் செய்வதை பயணிகள் தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் சிரவணபெலகொலா மத்திமமான மழைப்பொழிவைப்பெறுகின்றது. மழைக்காலத்தில் இப்பகுதி அதிகமான ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.  மேலும் மழைக்காலத்தில் சுற்றுப்புற சூழல் மிகப் பசுமையாக காட்சியளிப்பதால் பயணிகள் இக்காலத்தில் இங்கு விஜயம் செய்ய விரும்புகின்றனர்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தின்போது பகுதியின் பருவநிலை மிக குளுமையாகவும் இனிமையாகவும் காணப்படுகிறது. வெப்ப நிலை சராசரியாக 190C முதல் 300C  வரை  உள்ளது. ஆகவே குளிர்காலம் சிரவணபெலகொலா சுற்றுலாஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக கருதப்படுகிறது.