சாம்பல் நிற இராட்சஸ அணிலை பாதுகாப்பதற்காக செண்பகத்தோப்பு இராட்சஸ அணில் சரணாலயம் நிறுவப்பட்டது. இவ்விடம் கோவில் நகரமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகிலும், புகழ்பெற்ற பாலக்காட்டு சந்திற்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது.
இந்த மாநிலத்தின் மக்கள் இந்த இடத்தை சிறந்த பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியாக கருதுகின்றார்கள். அநேக மிருகங்களை இந்த இடத்தில் பார்க்க முடிந்தாலும், இவ்விடம் இராட்சஸ அணிலுக்கே பெயர்பெற்றது.
இந்தியாவில் அழிந்துவரும் மிருகங்களில் இதுவும் ஒன்று என்பதால் இதை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த அழகிய சரணாலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பது கடினம் என்பதால் சரணாலய நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்கள்.
இச்சரணாலயத்தை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இன்னும் சில யோசனைகள் வருங்காலத்தில் நடைமுறைபடுத்தப்படும். குழந்தைகள் இந்த இடத்தை அதிகமாக விரும்புவார்கள்.



Click it and Unblock the Notifications