தலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள விசேஷ அம்சமான அர்கேஷ்வர் கோயிலை தவறாது விஜயம் செய்ய வேண்டும் . புதையுண்டு போன ஐந்து கோயில்களின் ஒன்றான இந்த கோயிலில் ஒரு அதிசய சிவலிங்கம் உள்ளது.
இந்த சிவலிங்கத்துக்காக 12 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் சிறப்பு பூஜைத்திருவிழா நாடெங்கிலுமிருந்தும் பக்தர்களை வரவழைக்கின்றது. இக்கோயிலில் உள்ள பைரவர், துர்கை, அபயங்கரலிங்கம் போன்ற சிலைகள் பக்தர்களை பெரிதும் கவர்கின்றன.
இந்த கோயில் வாசலிலில் ஒரு பாறையின் அருகில் பொதிக்கப்பட்டுள்ள வாஸ்து யந்திரத்தையும் பயணிகள் காணலாம். மேலும் இந்த பாறையில் பசுக்களை கட்டிவைத்தால் அவற்றுக்குள்ள பிணிகள் தீரும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.



Click it and Unblock the Notifications