Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டப்போலா » வானிலை

டப்போலா வானிலை

டப்போலாவை சுற்றிப் பார்க்க வருடத்தின் எந்த காலமும் சிறந்ததே.

கோடைகாலம்

டப்போலாவின் கோடை காலம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கும். அந்த சமயங்களில் டப்போலாவின் வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரியும், குறைந்தபட்சமாக 18 டிகிரியுமாக இருக்கும். அதனால் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்கும், மற்ற சுற்றுலா அனுபவங்களை பெறவும் டப்போலாவின் கோடை காலம் சிறப்பானதாக அமையும்.

மழைக்காலம்

டப்போலாவின் மழைக் காலம் ஜூன் பாதியில் தொடங்கி, செப்டம்பர் இறுதியில் முடிவடையும். இந்த காலங்களில் சுற்றுலா வந்தால் மக்கள் முற்றிலும் புதிய தோற்றத்தில் டப்போலாவை காணலாம்.

குளிர்காலம்

குளிர் காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில், பேரழகே உருவாய் காட்சியளிக்கும் டப்போலாவின் தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த காலங்களில் டப்போலாவின் வெப்பநிலை அதிகபட்சமாக 24 டிகிரியும், குறைந்தபட்சம் 5 டிகிரியுமாக இருக்கும்.