Search
 • Follow NativePlanet
Share

டப்போலா - குட்டி காஷ்மீர்

12

மகாராஷ்டிராவின் குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும் டப்போலா கிராமம் மகாபலேஷ்வரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்துக்கு செல்லும் வழியெங்கும் எழில் வண்ண ஓவியமாய் இயற்கை காட்சிகள் காண்போரை பரவசப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்தை தேடி வரும் சாகசப் பிரியர்களுக்கு எண்ணற்ற சவால்களும், கிளர்ச்சியூட்டும் அனுபவங்களும் காத்துக்கிடக்கின்றன.

டப்போலாவின் மாசற்ற சுற்றுச்சூழல் அமைப்பு சுற்றுலா வரும் பயணிகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, முதியவர்கள் தங்கள் உடல் பலவீனங்களை மறந்து இளமை தெம்போடு வளம் வர ஏற்றதாக இருக்கும்.

இதுதவிர நீங்கள் நீர் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவராக இருப்பின், உங்களுக்கென்றே 90 கிலோமீட்டர் நீளம் பரந்து கிடக்கும் சிவசாகர் ஏரியில் நீந்தியோ, கயாக் என்னும் சிறுபடகில் சவாரி செய்தோ பொழுதை களிக்கலாம்.

அதோடு மோட்டார் படகுகளும், நீர் ஸ்கூட்டர்களும் உங்களுக்குள் இருக்கும் குழந்தைக்கு குதூகலமான அனுபவத்தை கொடுக்கும்.

டப்போலாவில் நடை பயணம் செல்ல விரும்புவோர் வஸோட்டா கோட்டைக்கு செல்வது சிறப்பாக இருக்கும். இந்த கோட்டையில் நடைபயணம் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

வஸோட்டா கோட்டைக்கு படகில் வருவதும், அதன் பின் கோட்டையில் ஏறிச்செல்லும் அனுபவமும் சவாலானதாக இருக்கும்.

இதெல்லாம் வேண்டாம் வெறுமென நடந்து சென்று இயற்கை காட்சிகளை ரசிக்க விரும்பும் பயணிகள் ஸ்ட்ராபெரி தோட்டத்துக்கும், செடி வளர்ப்பு பண்ணைகளுக்கும் சென்று பொழுதை இன்பமயமாக களிக்கலாம்.

அப்படிச் செல்லும் போது முன்பனிக் காலத்தில் காஸ் பீடபூமியை போர்த்திக்கொண்டு வண்ணக்கோலம் படைக்கும் 150-க்கும் மேற்பட்ட பூவினங்களை கண்டு நீங்கள் பரவசமடைவது நிச்சயம்.

டப்போலா சிறப்பு

டப்போலா வானிலை

டப்போலா
36oC / 97oF
 • Partly cloudy
 • Wind: SSW 7 km/h

சிறந்த காலநிலை டப்போலா

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது டப்போலா

 • சாலை வழியாக
  மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களான மும்பை, நாசிக், பாஞ்ச்கணி, சத்தாரா போன்ற இடங்களிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் டப்போலாவுக்கு இயக்கப்படுகின்றன. அதன் பணச்சீட்டுகளும், மிகக் குறைவாகவே, 75 முதல் 250 ரூபாய் அளவிலேயே இருக்கும். மேலும் இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் தனியார் சுற்றுலாப் பேருந்துகளும் டப்போலாவுக்கு நிறைய எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  பூனே மற்றும் வாதார் ரயில் நிலையங்கள் டப்போலாவுக்கு மிக அருகில் இருக்கின்றன. இந்த நிலையங்களுக்கும், இவை வழியாகவும் இந்தியாவின் எல்லா நகரங்களிலிருந்தும் ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு வந்தடைந்த பயணிகள் வாடகை கார்கள் மூலம் டப்போலா செல்லலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  டப்போலாவிலிருந்து பூனே விமான நிலையம் 156 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல் மும்பை சத்ரபதி விமான நிலையமும் டப்போலாவுக்கு மிக அருகில் இருக்கிறது. இந்த விமான நிலையங்களிலிருந்து டப்போலாவுக்கு குறைந்த தொகையில் வாடகை கார்களும் கிடைக்கும். இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி டப்போலாவை அடையலாம்.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
 • Today
  Tapola
  36 OC
  97 OF
  UV Index: 7
  Partly cloudy
 • Tomorrow
  Tapola
  26 OC
  79 OF
  UV Index: 7
  Heavy rain at times
 • Day After
  Tapola
  26 OC
  79 OF
  UV Index: 6
  Thundery outbreaks possible