Search
 • Follow NativePlanet
Share

குஹாகர் - புராதனக் கோயில்களும்! எழில் கொஞ்சும் கடற்கரைகளும்!

10

இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் எனும் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும் கம்பீரமான சஹயாத்ரி மலைத்தொடர் மற்றொரு புறமும் இருக்க நடுவில் எழிலுடன் வீற்றிருக்கிறது இந்த நகரம். குஹாகர் எனும் பெயருக்கு குகைவீடு என்பது பொருளாகும்.

 

கோயில் நகரம்

இங்கு அதிக எண்ணிக்கையில் ஹிந்துக்கோயில்கள் அமைந்திருப்பதால் இதற்கு கோயில் நகரம் என்ற சிறப்பும் உண்டு. சிவனின் பல அவதார வடிவங்களுக்கு இங்கு கோயில்கள் உள்ளன. பால்கேஷ்வர் கோயில், உடலேஷ்வர் கோயில், வியாதேஷ்வர் கோயில், வேலனேஷ்வர் கோயில்  மற்றும் தால்கேஷ்வர் கோயில் போன்றவை இங்கு அமைந்துள்ளன.

சந்திகா மந்திர் என்று பிரசித்தமாக அறியப்படும் கோயிலும் இங்குள்ளது. குஹாகர் கடற்கரையை ஒட்டியே ஒரு உத்தர கணபதி கோயிலும் பிரசித்தமாய் உள்ளது. இவை தவிர ஷீ தசபுஜ லக்ஷ்மிகணேச தேவஸ்தானம் மற்றும் மஹேஸ்வரி கோயில் போன்ற கோயில்களும் குறிப்பிடத்தக்கவை.

வருடாவருடம் எண்ணற்ற பக்தர்கள் இங்குள்ள சிவனின் அருளைப்பெற வேண்டியும் மற்ற தெய்வங்களை தரிசிக்கவும் இந்த குஹாகர் நகருக்கு வருகை தருகின்றனர். மிகச்சிறப்பாக மஹாசிவராத்திரி திருவிழாவின் போது இந்த நகரம் பக்தர்களால் நிரம்பிக் காணப்படுகிறது. அச்சமயம் இங்கு ஒரு திருவிழாச்சந்தையும் நடத்தப்படுகிறது.

தனிமையான ஒரு கடற்கரை

அமைதியான எழிலுடன் காணப்படும் இந்த நகரத்தின் கடற்கரை தூரத்தே மறையும் தங்க நிற சூரியனை பார்த்து ரசிக்கவும், நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும், அல்லது ஏகாந்தமாக ஓய்வு எடுக்கவும் மிகப் பொருத்தமான கடற்கரையாகும்.

எப்படி எப்போது இங்கு செல்லலாம்

மேற்குக்கடற்கரையோரம் அரபிக்கடலை ஒட்டி இருப்பதால் இந்த நகரம் கடற்கரைப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது. மழைக்காலம் மற்றும் குளிர்காலம் முடிந்து வரும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலமே இங்கு வருகை தருவதற்கு உகந்த காலமாகும்.

வருடாந்திர சராசரி வெப்பநிலை அதிகபட்சமாக 39°C என்ற அளவிலும் குறைந்தபட்சமாக  என்ற 18°C அளவிலும் காணப்படுகிறது. மே மாதத்தில் இங்கு உஷ்ணம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் அக்காலத்தில் பயணம் மேற்கொள்ளாதிருப்பது நல்லது.

வெப்பப்பிரதேசத்துக்குரிய பழங்களான அல்போன்ஸா மாம்பழங்கள், பலாப்பழம், முந்திரி போன்றவையும் இளநீரும் இங்கு அதிக அளவில் கிடைக்கின்றன. இங்குள்ள கடல் உணவு வகைகளும் ருசி பார்ப்பதற்கு மறக்கக்கூடாத அம்சமாகும்.

நீங்கள் சுத்த சைவமாக இருப்பினும் கவலையே வேண்டியதில்லை. நல்ல பிராமண சைவ உணவு வகைகளும் அதே சமயம் அசைவ உணவுகளும் சேர்ந்தே கிடைக்கும் வெகு சில நகரங்களில் குஹாகர் நகரமும் ஒன்று.

புரதானக்கோயில்கள், அருகிலுள்ள அழகான அருவிகள், எழில் கொஞ்சும் கடற்கரைகள், பசுமையான காடுகள் என்று எல்லா சுற்றுலா அம்சங்களையும் கொண்டிருக்கும் இந்த குஹாகர் நகரம் உங்களுக்கு ஒரு மறக்க முடியாத இனிமையான அனுபத்தைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குஹாகர் சிறப்பு

குஹாகர் வானிலை

குஹாகர்
23oC / 74oF
 • Clear
 • Wind: ENE 6 km/h

சிறந்த காலநிலை குஹாகர்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது குஹாகர்

 • சாலை வழியாக
  நீங்கள் சாலை மார்க்கமாக குஹாகர் செல்ல விரும்பினால் மஹராஷ்டிரா மாநில அரசுப்போக்குவரத்து பேருந்துகளும், தனியார் சுற்றுலாப்பேருந்துகளும் ஏராளம் உள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாநில முக்கிய நகரங்களோடு இவை குஹாகர் நகரத்தை இணைக்கின்றன. 356 கி.மீ தொலைவிலுள்ள மும்பையிலிருந்து குஹாகர் வருவதற்கு சுமார் 900 ரூபாய் பேருந்துக் கட்டணமாக இருக்கும்.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  குஹாகர் ஸ்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக சிப்லுன் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது கொங்கண் ரயில்வே பாதையில் உள்ளது. எனவே மும்பை மற்றும் கோவை நகரங்களுடன் இந்த ரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் குஹாகர் அமைந்துள்ளது. இங்கிருந்து குஹாகருக்கு டாக்ஸியில் செல்ல சுமார் 500 ரூபாய் செலவாகலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  குஹாகர் சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஆகும். இது எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சர்வதேச நகரங்களுடன் அதிகமான விமான சேவைகளைக் கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து குஹாகர் செல்வதற்கு டாக்ஸி சேவைகள் ஏராளம் உள்ளன. தோராயமான டாக்ஸி கட்டணம் 5000 ரூபாய் இருக்கலாம்.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Jan,Thu
Return On
18 Jan,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
17 Jan,Thu
Check Out
18 Jan,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
17 Jan,Thu
Return On
18 Jan,Fri
 • Today
  Guhagar
  23 OC
  74 OF
  UV Index: 9
  Clear
 • Tomorrow
  Guhagar
  21 OC
  69 OF
  UV Index: 9
  Sunny
 • Day After
  Guhagar
  21 OC
  69 OF
  UV Index: 9
  Partly cloudy